வியாழன், 9 மே, 2019

திருக்குறள் -சிறப்புரை :1248


திருக்குறள் -சிறப்புரை :1248

பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதையென் நெஞ்சு. ---- ௨ ௪ ௮

நெஞ்சே…! தலைவரைப் பிரிந்து வருந்தும் நம்மை அவர் அன்பு பாராட்டவில்லை என்று கருதி, இரங்கி,  (நமது நிலைமையைத் தெரிவிக்க )  பிரிந்து சென்றவர் பின் செல்கின்றாயே, நீ யாதும் அறியாய்.

காணாமை இருள்பரப்பி கையற்ற கங்குலான்
மாணாநோய் செய்தான்கண் சென்றாய் மற்று அவனை நீ
காணவும் பெற்றாயோ காணாயோ மட நெஞ்சே.” ---கலித்தொகை.

  அறியாமையுடைய நெஞ்சே….! கானலிடத்தே எந்தப்பொருளையும் எவரும் காணவியலாத வண்ணம் இருளைப் பரப்பிச் செயலற்றுப் போதற்கரிய கங்குல் பொழுதில். மாட்சிமைப்படாத காமநோயைச் செய்தவனிடத்தே சென்றாய் ; அப்படிச் சென்றாயே, மற்று நீ அவனைக் காணப் பெற்றனையோ அல்லது அவனைக் காணாதுதான் இருந்தனையோ…? கூறுவாயாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக