புதன், 15 மே, 2019

திருக்குறள் -சிறப்புரை :1260


திருக்குறள் -சிறப்புரை :1260

நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல். ---- ௨ ௬0

எரியும் தீயில் இட்ட கொழுப்பு உருகி ஓடுவதைப் போல , இளகிய மனம் கொண்ட மகளிர்க்குக் காதலனோடு முதலில்  பிணங்கிப் பின்னர்க் கூடுவோம் என்பது இயலுமோ..?

உரிது என் வரைத்து அன்றி ஒள்ளிழை தந்த
பரிசு அழி பைதல் நோய் மூழ்கி எரி பரந்த
நெய்யுள் மெழுகின் நிலையாது பைபயத்
தேயும் அளித்து என் உயிர்
….. ………….. ……. ……..
அன்புறு கிளவியாள் அருளி வந்து அளித்தலின்.” –கலித்தொகை.

ஒள்ளிய இழையை உடையாள் எனக்குத் தந்த பரிசு, என் உயிர், என்னிடத்து இருக்கிறது என்பதன்றி, என் இயல்புகள் அழிதற்குக் காரணமான வருத்தம் மிக்க காமநோயிலே என் உயிர் அழுந்தி, நெருப்புப் பரந்த நெய்யுள்ள கிடந்த மெழுகு, நிலையாது மெத்தென உருகித் தேயுமாறு போல, நிலை இல்லாது மெல்ல  மெல்லத் தேய்கின்றது. இஃது எல்லோராலும் அளிக்கும் தன்மை உடையது.
    இப்படி யான் பாட.
அன்புறு கிளவியாள் அதனைக்கேட்டு, அருள் செய்து, என்னை அளித்தனள்.அதனால் அன்புற்று மனவேட்கை அடங்கியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக