புதன், 15 மே, 2019

திருக்குறள் -சிறப்புரை :1259


திருக்குறள் -சிறப்புரை :1259

புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு. ---- ௨ ௫ ௯

பிரிந்து சென்று மீண்டு வந்த காதலரைக் கண்டு, பிணங்குவோம் என்றுதான் மறைந்து நின்றேன் ; என் நெஞ்சமோ விரைந்து சென்று, அவரோடு கலந்து உறவாடவும்  அவரைத் தழுவி மகிழ்ந்தேன்.

அம்ம வாழி தோழி யான் இன்று
அறனிலாளற் கண்ட பொழுதில்
சினவுவென் தகைக்குவென் சென்றனன்
பின் நினைந்து இரங்கிப் பெயர் தந்தேனே.”-----ஐங்குறுநூறு.

 தோழி நீ வாழி…! யான் கூறுவதனைக் கேட்பாயாக. யான் இன்று நம் காதலனாகிய அன்பில்லாதனைக் கண்டபோது, அவன்பால் சினம்கொண்டு ஊடுவேன் என்றும் அவன் இல்லத்துள் புகாது தடுப்பேன் என்றும் உறுதிகொண்டு அவன் முன் சென்றேன். ஆனால், அவனைக் கண்டவுடன் உலகியலை நினைந்தும் மனம் இரங்கியும் அவ்வுறுதி தளரப்பெற்று வறிது மீண்டேன், என்னே என் இயல்பு..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக