புதன், 8 மே, 2019

திருக்குறள் -சிறப்புரை :1245


திருக்குறள் -சிறப்புரை :1245

செற்றா ரெனக்கை விடலுண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர். ----- ௨ ௪ ௫

 நெஞ்சே…! அவர்மீது நாம் காதல் கொண்டிருக்க, நம்மீது காதல் கொள்ளாதிருக்கும் அவரை, நம்மை வெறுத்தார் என்று கருதிக் கைவிடல் இயலுமோ நமக்கு..?

எல்வளை ஞெகிழ்த்தோர்க்கு அல்லால் உறீஇயர்
சென்ற நெஞ்சம் செய்வினைக்கு உசாவாய்
ஓங்குவரல் நசையொடு வருந்தும் கொல்லோ.” நற்றிணை.

ஒளி பொருந்திய வளையை நெகிழ்வித்தோரைக் கருதித் துன்பம் கொள்ளுதலின், அவரிடத்துச் சென்ற என் நெஞ்சமானது, ஆண்டு அவர் செய்யும் வினைக்குச் சூழ்ச்சி சொல்லும் துணையாயிருந்து முடித்து வைத்து, அவருடன் ஒருசேர வருவதற்கு விருப்பமுற்று, அங்கே வருந்தியிருக்கின்றதோ…?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக