திருக்குறள்
-சிறப்புரை
:1231
124. உறுப்பு நலன் அழிதல்
சிறுமை
நமக்கொழியச்
சேட்சென்றார்
உள்ளி
நறுமலர்
நாணின
கண். ------- க ௨ ௩0
பொருள் தேடி நெடுந்தொலைவு சென்றார் காதலர். பிரிவாற்றமையால் அழுதகண்கள் முன்பிருந்த அழகை இழந்து,
நறுமணமிக்க மலர்களைக் காணும்போதெல்லாம் நாணுகின்றன.
”பாடின்றி பசந்தகண் பைதல
பனிமல்க
வாடுபு வனப்பு ஓடி வணங்கிறை
வளையூர
ஆடெழில் அழிவஞ்சாது அகன்றவர்
திறத்து இனி
நாடுங்கால் நினைப்பது ஒன்று
உடையேன்…அதுவுந்தான்
தொல்நலம் தொலைய ஈங்கு யாம் துயர் உழப்பத் துறந்துள்ளார்
” --- கலித்தொகை.
உறக்கம் இன்றிக் கண்கள்
பசந்தன ; வருத்தம் மிக நீர் நிறைந்தது ; நிறம் வாடி அழகு கெட்டது . வளைகள், வளைந்த முன்கையினின்றும்
கழன்று வீழ்ந்தன ; வெற்றியை உடைய அழகின் அழிவுக்கு
அஞ்சாது, பிரிந்து சென்றுவிட்டார் ;அவர் பொருள் பொருட்டுச்
செய்யலாமோ என்ற நினைப்பு ஒன்று உடையேன் ……..! காதலர், நம்முடைய பழைய அழகெல்லாம் கெட்டு, வருத்தத்தில் அழுந்தும்படி கைவிட்டுப்
பொருள்மேல் நாட்டம்கொண்டு பிரிந்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக