சனி, 4 மே, 2019

திருக்குறள் -சிறப்புரை :1237


திருக்குறள் -சிறப்புரை :1237

பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோள் பூசல் உரைத்து. ---- ௨௩௭

நெஞ்சே…! என்காதலர் எம்மைவிட்டுப் பிரிந்துசென்றதால் எம் தோள்கள் மெலிந்தன, அது கண்டு ஊரார், அவர் கொடியவர் என்று  தூற்றுகின்றனர்.  அதனை எம் காதலர்க்கு எடுத்துக்கூறி, நீ பெருமை அடையாயோ..?

கோடீர் இலங்கு வளை நெகிழ நாளும்
பாடில கலிழும் கண்ணொடு புலம்பி
ஈங்கு இவண் உறைதலும் உய்குவோம் ஆங்கே
எழு இனி வாழி என் நெஞ்சே…” ---குறுந்தொகை,

சங்கினை அறுத்துச் செய்யப்பட்ட வளையல்கள் முன்கையில் சிறந்து விளங்க . அவை நெகிழுமாறு உடல் மெலிய, தலைவன் பிரிந்து சென்ற ஒவ்வொரு நாளும் உறக்கமில்லாமல் கலங்கி அழும் கண்ணொடு, தனிமைத் துயரால், நாம் இங்கு வருந்தியிருத்தலினின்றும் தப்புவோம். என் நெஞ்சே..! நீ வாழ்வாயாகநீ, அவனுடைய நாட்டிற்குச் செல்ல இப்பொழுதே எழுவாயாக..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக