திருக்குறள்
-சிறப்புரை
:1269
ஒருநாள்
எழுநாள்போல்
செல்லும்சேட்
சென்றார்
வருநாள்வைத்து
ஏங்கு
பவர்க்கு. --- க ௨ ௬ ௯
நெடுந்தொலைவு சென்ற காதலர் வரவை எதிர்பார்த்து ஏங்கியிருக்கும்
மகளிர்க்கு, ஒரு நாள் ஏழுநாள்போல நெடியதாய்க்
கழியும்.
“தெரி இழை அரிவைக்குப் பெரு விருந்தாக
வல்விரைந்து கடவுமதி பாக – வெள்வேல்
வென்றடு தானை வேந்தனொடு
நாள் இடைச் சேப்பின் ஊழியின் நெடிதே. ----ஐங்குறுநூறு.
தேர் வலவனே…!
அணிகலன்களை தெரிந்தெடுத்து அணிந்து மகிழும் அரிவைக்குப் பெரு விருந்தாகுமாறு
சென்றடைதற்குத் தேரை மிக விரைவாகச் செலுத்துவாயாக, வெள்ளிய வேலைத்
தாங்கிப்
பகைவர்களைக்
கொன்றழிக்கும்
தானையை உடைய வேந்தனொடு
இடைவழியில்
ஒரு பொழுது தங்கினும்
அப்பொழுது
ஊழியினும்
நெடிதாகத்
தோன்றும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக