புதன், 22 மே, 2019

திருக்குறள் -சிறப்புரை :1273


திருக்குறள் -சிறப்புரை :1273

மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன்று உண்டு. ---- ௨ ௭ ௩

கோக்கப்பட்ட பளிங்கு மணியில் மறைந்து வெளிப்படும் நூலைப்போல, இவள் அழகினுக்குள்ளே  மறைந்து தோன்றும் குறிப்பு ஒன்று உள்ளது.

குன்றநாடன் அன்பிலை யாகுதல்
அறியேன் யானஃது அறிந்தெனன் ஆயின்
அணியிழை உண்கண் ஆயிதழ்க் குறுமகள்
மணியேர் மாண் நலம் சிதையப்
பொன்னேர் பசலை பாவின்று மன்னே.”-----அகநானூறு.

குன்றநாடனே நீ, அன்பிலை ஆதலை யான் முன்பே அறிந்திலேன். அதனை யான் அறிந்துளேனாயின், அழகிய அணிகலனையும் அழகிய இதழையுடைய மையுண்ட கண்களையும் உடையாய என் தலைவியின், நீலமணி போலும் சிறந்த அழகுகெட, பொன்னை ஒத்த பசலை பெரிதும் பரத்தல் இல்லையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக