திருக்குறள்
-சிறப்புரை
:1246
கலந்துணர்த்தும் காதலர்க் கண்டால் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு -----க ௨ ௪௬
நெஞ்சே..!
காதலருடன் கொண்ட புலவியைக் கூடலால் தீர்க்க வல்லவர் தலைவர் என்று அறிந்திருந்தும்
நீ, பொய்யாகப் பிணங்கினாய், ஆயின் இப்பொழுது
நீ அவர் கொடியர் என்று கூறிப் பொய்யாகவே சினம் கொண்டனையே.
எல்லையும் இரவும் துயில் துறந்து பல் ஊழ்
அரும்படர் அவல நோய் செய்தான் கண்பெறல் நசைஇ
இருங்கழி ஓதம் போல் தடுமாறி
வருந்தினை அளிய என் மடம்கெழு நெஞ்சே.” ---கலித்தொகை.
அறியாமையுடைய நெஞ்சே…! பொறுத்தற்கரிய வருத்தத்தைக் கொடுக்கும்
காமநோயைச் செய்தவனிடத்தே, இரவும் பகலும் உறக்கத்தைக் கைவிட்டனை ; கரிய கழியில் ஓதம் போவதும் வருவதுமாய்த் தடுமாறும் தன்மை போல், பலமுறை அவனை அடைய விரும்பி, வீணே அலைந்து தடுமாறி,
முடிவில் வருந்தினை ; அவனிடத்து நீ பெற்றது என்னை..?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக