திருக்குறள்
-சிறப்புரை
:1253
மறைப்பேன்மன்
காமத்தை
யானோ
குறிப்பின்றித்
தும்மல்போல்
தோன்றி
விடும். --- க ௨ ௫ ௩
காமவேட்கையை என்னுள் மறைத்து வைத்துக்கொள்ள விரும்பினேன், ஆயினும் முன்னறிவிப்பு ஏதுமின்றித் தும்மலைப்போல்
அடக்கவியலாது வெளிப்பட்டுவிடுகின்றது.
“குக்கூ என்றது கோழி அதனெதிர்
துட்கென்றன்று என் தூஉ நெஞ்சம்
தோள்தோய் காதலர்ப் பிரிக்கும்
வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே.----குறுந்தொகை.
கோழி,
குக்கூ என்று கூவிற்று. எனது தோளை மண்ந்த காதலரைப்
பிரியச் செய்யும் வாளைப்போல, வைகறைப் பொழுது வந்தது அதனால்,
என் தூய நெஞ்சம் துட்கென அச்சம் கொள்வதாயிற்று..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக