திருக்குறள்
-சிறப்புரை
:1292
உறாஅ
தவர்க்கண்ட
கண்ணும்
அவரைச்
செறாஅரெனச்
சேறிஎன் நெஞ்சு. ----- க ௨ ௯ ௨
நெஞ்சே..!
நம்மிடத்துத் தலைவர் அன்பில்லாதவர் என்று அறிந்திருந்தும், அவரிடம் சென்று சேர்ந்தால் சினம் கொள்ளமாட்டார் என்று கருதி சென்றனையே…
என்னே உன் அறியாமை..!
“ பயப்பு என் மேனியதுவே நயப்பு அவர்
நார் இல் நெஞ்சத்து ஆரிடையதுவே
செறிவும் சேண் இகந்தன்றே அறிவே
ஆங்கண் செல்கம் எழுக என ஈங்கே
வல்லா கூறியிருக்கும்………” –குறுந்தொகை.
பசலை நோய் என் உடம்பின்கண் பரவி உள்ளது. அந்நோய் நீங்குவதற்கு உரிய காதல், என்னிடத்து அன்பில்லாமல், அவரிடம் அன்புகொண்டு சென்ற
நெஞ்சத்துடன், செல்லுதற்கு அரிய தொலைவில் உள்ளது. உயிரைப் பற்றிக்கிடக்கும் என் அறிவு, அவர் இருக்கும்
இடம் தேடி எழுக என யாம் செய்ய இயலாதன கூறி, இங்கே என்னுடன் இருக்கும்…!