புதன், 1 ஆகஸ்ட், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -39

மெய்ப்பொருள் காண்பது அறிவு -39
ஆரியப் புரோகிதம் -3
 பண்டைய ஆரியர்கள் நம் நாட்டுக்குள் நுழைந்து நாடோடிகளாகச் சென்றுகொண்டிருந்த காலத்திலே அவர்களிடையே ஏற்பட்ட வழக்கம் இது. வயதடைந்த பெண்களை உடன் அழைத்துக்கொண்டு ஊர் ஊராக நடமாடுவதில் ஏற்படும் அச்சத்தினால், தக்க மணாளனைக் கண்டபோது, தம் வயதுவராத பெண் குழந்தையை அவனிடம் ஒப்படைத்து விடுகையில் அப்பெண்ணைத் தொட்ட கையையும் பெற்றோர்கள் நீர்த்தாரை வார்த்துக் கழுவி விடுவதும், பெண்ணை மணமகனுக்குத் ‘தத்தம்’ செய்து தந்துவிடுவதும் அவர்களிடையே அப்போதைய வழக்கமாக இருந்தது. குழந்தையைத் தூக்கித் தந்தை மடியில் வைத்துக் கொண்டு திருமணத்தைச் செய்விப்பதால் அந்த மணம் ‘விவாகம்’ என்று அழைக்கப்பட்டது. இக்காலத்தில் அவ்வழக்கம் தேவையில்லை. விவாகம் என்ற பெயரும் தேவையில்லை.
 மண்மக்கள் அறிவிலும் திருவிலும் ஒத்த நலமுடையவர்கள்; மணமக்களைத் தத்தம் பண்ண்வோ, தானம் செய்யவோ கூடாது என்பது தமிழர் கருத்து.
  தமிழர் திருமணத்தை நடத்துவிப்பதற்கெனத் தனிப்பட்ட ஒருவர் தேவையில்லை. குடும்பத்திலுள்ள ஒரு பெரியவர், அல்லது கும்பத்தார் மதிக்கும் நல்லவர் எவரும் செய்து வைக்கலாம்.
“விவாகம் என்ற சொல்லுக்குப்பொருள் –தூக்கிக் கொண்டு போவது ‘வக்’- தூக்கு ; வி –சிறப்பாக ; விவக் – சிறப்பாகத் தூக்கிக் கொண்டு போவது. குழந்தை மணம் , குழந்தையின் தந்தை அவளை மடியில் வைத்துப் பிடித்துக் கொண்டுதான் மணம் செய்து கொடுக்க முடியும். இன்றும் இவ்வழக்கம் தொடர்கிறது.)
--- கீ. இராமலிங்கனார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக