புதன், 1 ஆகஸ்ட், 2018

இன்று தாய்ப்பால் நாள்


இன்று தாய்ப்பால் நாள்

“பாலோடு அலர்ந்த முலை மறந்து முற்றத்துக்
 கால்வல்  தேர் கையின் இயக்கி நடை பயிற்றா
மருதன் இளநாகனார் கலித். 81: 8 – 9

பாலோடு விம்மின முலையிலே பால் பருகவும் மறந்து. முற்றத்திலே கையாலே தேரை உருட்டித் தள்ளியவாறு நடை பயின்றனன்.

மேற்சுட்டியுள்ள கலித்தொகைப் பாடல்களில் தாய்ப்பால் பருகும் புதல்வன் – மழலைப் பருவத்தினன் என்று எண்ணிவிடக்கூடாது. புதல்வன் புத்தேளிர் கோட்டம் வலம் செய்தும் விளையாடியும் கடவுட் கடிநகர் வலம் கொண்டுவரும் வயதினன் என்பதை அறிதல் வேண்டும். அக்காலத்தே ஆண் குழந்தைகள் நான்கு / ஐந்து வயதுவரை தாய்ப்பால் குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர்.

வாய் நன்கு அமையாக் குளனும் வயிறு ஆரத்
தாய் முலை உண்ணாக் குழவியும் சேய் மரபின்
கல்வி மாண்பு இல்லாத மாந்தரும் இம் மூவர்
நல்குரவு சேரப்பட்டார்
நல்லாதனார்,      திரிகடு. 84

                    துறையின்றிக்கிடக்கும் குளம் வழிச்செல்வார் வருத்தம் தீர்க்க உதவாது பயனற்றுப் போகும்  ; வயிறு நிறையத் தாய்ப்பால் அருந்தாத குழந்தை வலிவும் பொலிவுமாகிய வளம் இழந்து வறுமையில் வீழும்; இளமையில் கல்விபயிலாத மாந்தரின் வாழ்க்கை வறுமையின் வாய்ப்படும் எனபார் .

A healthier baby
"The incidences of pneumonia, colds and viruses are reduced among breastfed babies," says infant-nutrition expert Ruth A. Lawrence, M.D., a professor of pediatrics and OB-GYN at the University of Rochester School of Medicine and Dentistry in Rochester, N.Y., and the author of 
Breastfeeding: A Guide for the Medical Profession.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக