ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

திருக்குறள் -சிறப்புரை :957


திருக்குறள் -சிறப்புரை :957
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து. ---- ௯௫௭
நற்குடியில் பிறந்தாரிடத்து ஒரு சிறிய குற்றம் தோன்றுமாயின், அஃது வானில் உயர்ந்து தோன்றும் திங்களில் உள்ள களங்கம் போல் பலரும் அறிய விளங்கித் தோன்றும்.
“ ஒன்றாய்விடினும் உயர்ந்தார்ப்படும் குற்றம்
 குன்றின் மேல் இட்ட விளக்கு.” –பழமொழி.
உயர்ந்தோர் ஒரு சிறிய புரியினும் அது குன்றின் மேல் இட்ட விளக்கைபோல் பல்லோர் பார்வையில் படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக