சனி, 11 ஆகஸ்ட், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -48

மெய்ப்பொருள் காண்பது அறிவு -48
உலகாயதத் தத்துவத்தை அறிய நாம் எந்தெந்த நூல்களை ஆதாரமாகக் கொள்ள வேண்டியதாய் உள்ளது? உலகாயதத்தை இழிவுபடுத்தவும் மறுக்கவும் எண்ணியவர்களது எழுத்துக்களிலிருந்துதான் உலகாயதத்தை அறிந்துகொள்ளும் நிலைமையில் இருக்கிறோம். பூர்வபட்ச அறிவாகத்தான் உலகாயதம் நமக்குக் கிடைத்திருக்கிறது. மற்றையத் தத்துவங்களுக்கு அவ்வவ்த் தத்துவவாதிகளே எழுதி வைத்துப் பாதுகாக்கப்படுவது போல, உலகாயத நூல்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் அத்தகைய நூல்கள் என்றுமே இருந்ததில்லை என்பதல்ல பொருள். பண்டைக் காலத்திலும் நடுக்காலத்திலும் உலகாயத தத்துவ நூல்கள் இருந்தன என்பதைப் பல சான்றுகள் கொண்டு தாஸ்குப்தா, கார்வே, துக்சி போன்ற அறிஞர்கள் நிரூபணம் செய்துள்ளார்கள்.
 மிகவும் தொன்மையானது என்று அவ்வச் சமயவாதிகள் தங்கள் தத்துவத்தையே குறிப்பிடுவார்கள். அவ்வச் சமயவாதிகளின் புராதன நூல்கள் உலகாயதத்தை மறுக்கின்றன. எனவே உலகாயதம் என்ற தத்துவம் பிற தத்துவங்களின் புராதன நூல்களைப் பார்க்கிலும் தொன்மையானது என்பது புலப்படும். பழமையானதெனக் கருதப்படும் வேதவாதம், சாங்கியம், மீமாம்சம், நியாயம், வைசேஷிகம் முதலிய தத்துவங்களிலும் இது பழமையானது. அப்பழமையான நூல்களிலிருந்து, தமிழ் இலக்கிய நூல்களிலிருந்தும் உலகாயதம் பற்றிக் கிடைக்கும் ஆதாரங்கள் பூர்வபட்சமாயிருப்பினும் கூட மிக முக்கியமானவை. – நா. வானமாமலை.=

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக