திருக்குறள் -சிறப்புரை
:958
நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும். ---- ௯௫௮
நற்குடியில் பிறந்த ஒருவனிடத்துக் கருணையின்மை, கடுஞ்சொல் முதலிய இழிகுணங்கள்
தோன்றுமாயின் அவன் பிறந்த குடிப்பிறப்பில்
ஐயம் கொள்ள நேரிடும்.
“செல்லா இடத்தும் குடிப்பிறந்தார்
செய்வன
செல் இடத்தும் செய்யார்
சிறியர் ….” –நாலடியார்.
நற்குடியில் பிறந்தார்கள் தங்களுக்குக் கூடாத இடத்தும் செய்ய வேண்டிய
நல்ல செயல்களைச் செய்வர் ;இழி குலத்தில் பிறந்தவர்கள் தங்களுக்குக் கூடிய இடத்தும் நல்ல செயல்களைச் செய்ய மாட்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக