திருக்குறள் -சிறப்புரை
:954
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர். --- ௯௫௪
பலகோடி அளவிற்றாய பொன் பொருளைப் பெறுவதாயிருந்தாலும் நல்ல குடியில் தோன்றியவர்கள்,
தாம் பிறந்த குடியின் பெருமை குறையுமாறு எந்தச் செயலையும் செய்ய மாட்டார்கள்.
“மடங்காப் பசிப்பினும் மாண்புடையாளர்
தொடங்கிப் பிறர் உடைமை மேவார்..”
–பழமொழி.
சான்றோர், தம்முடைய உடம்பு ஒடுங்கும்படி பசியால் வாடினாலும் பிறர் பொருளைக்
கொள்ள விரும்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக