திங்கள், 13 ஆகஸ்ட், 2018

திருக்குறள் -சிறப்புரை :963


திருக்குறள் -சிறப்புரை :963
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு. ---- ௯௬௩
செல்வம் பெருகிய நிலையில் யாவரிடத்தும் பணிவுடன் நடக்க வேண்டும்.  செல்வம் குறைந்து வறிய நிலை வந்துற்றபோதும் பண்புடைமையில் தாழாது. தன்மானத்தைக் காத்து உயர்ந்து நிற்க வேண்டும்.
“ மிகப்பேர் எவ்வம் உறினும் எனைத்தும்
உணர்ச்சி இல்லோர் உடைமை உள்ளேம்.” ---புறநானூறு.
எமக்குப் மிகப்பெரிய துன்பம் வந்தாலும் அதனைப் போக்கிக் கொள்ளச் சிறிதும் அறிவில்லாதவருடைய செல்வம் பயன்படாமையின் அதனை நினைத்துக்கூடப் பார்க்க மாட்டோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக