திருக்குறள் -சிறப்புரை
:967
ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று. ---- ௯௬௭
தன்னப் போற்றி மதியாதார் பின்னே சென்று மானம் அழிந்து உயிர் வாழ்வதைவிடத்
தன்மானத்தோடு வாழ்ந்து உயிர்துறந்தான் என்ற
நிலையே நன்று.
“பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை
பேசுங்கால்
இச்சை பல சொல்லி இடித்து
உண்கை சிச்சீ
வயிறு வளர்க்கைக்கு மானம்
அழியாது
உயிர் விடுகை சால உறும்.”
–நல்வழி.
இச்சை மொழிகளைப் பேசி ஒருவரைப் போற்றும் இழிவான பெரிய குடிவாழ்க்கையாவது,
பிச்சை எடுத்து உண்பதைவிட, சிச்சீ.. இது என்ன வாழ்க்கை ..? இப்படி வயிறு வளர்ப்பதைக்காட்டிலும்
உயிரை விடுதல் மிகவும் பொருந்தும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக