மெய்ப்பொருள் காண்பது அறிவு -42
மன்னித்தல்
”நெறியின்
நீங்கியோர் நீரல கூறினும்
அறியாமை
என்று அறியல் வேண்டும்.” –சிலப்பதிகாரம்.
நெறி
தவறி நடப்போர் தகாதவற்றைக் கூறினாலும் அவர்கள் தம் அறியாமையால் அவ்வாறு கூறினார்கள்
என்று அறிந்துகொள்ள வேண்டும்.
”இன்மையுள்
இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை
மடவார்ப் பொறை.—திருக்குறள்.
வறுமையுள் வறுமையாவது விருந்தினரைப்
போற்ற முடியாமை ; வலிமையுள் வலிமையாவது அறிவில்லாதார் செய்த குற்றத்தைப் பொறுத்தல்.
“ இழிந்த பழக்கங்களாலும் மடமைகளாலும் மனிதர் பிழைகளைச்
செய்தூவிடுகின்றனர். அவரை மன்னித்து விடுபவர் மாண்புடையராய் உயர்ந்து திகழ்கின்றனர்.
“சிறியோர்
செய்த சிறு பிழை எல்லாம்
பெரியோர்
ஆயின் பொறுப்பது கடனே..—நறுந்தொகை.
‘To err is human to forgive divine
–Pope.
பிழை புரிவது மனித நிலை; பொறுப்பது தெய்வ
நீர்மை. பொறை புண்ணிய நிறையாகின்றது.” ஜெகவீரபாண்டியனார்.
“ மனித மனம் நிலையற்றது. அதைக் காமம்
ஆட்கொள்ளும்போது மிருகமாகவும் ; கோபம் ஆட்சி செய்யும்போது வனவிலங்காகவும் துன்பம் குறுக்கிடும்போது
குழந்தையாகவும் இன்பம் குறுக்கிடும்போது பித்தனாகவும் மாற்றுகிறது.” – இமாம் கஸ்ஸாலீ.
பாவத்தின்
சம்பளம்…
இறைவனுக்குப் பகைவர் என்போர் நல்லொழுக்கத்தினின்று
விலகத் தீயொழுக்கத்தின்கண் செல்வோரே என்பதும் இறைவன் அவரை ஒறுத்தல் அவர் தீவினைக்கண்
மிக்கபோதே என்பதும் உணர்த்தற்கு
‘திறன் இகந்து
வரூஉம் அவர் உயிர் அகற்றும்’-பரிபாடல்.
மன்னிக்கப்படும் என்பதறிந்தே தவறு செய்பவர்களை ஒருபோதும் மன்னிக்கக்கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக