செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018

திருக்குறள் -சிறப்புரை :964


திருக்குறள் -சிறப்புரை :964
 தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை. ---- ௯௬௪
மானம் ஒன்றே பெரிதெனப் போற்றும் மாந்தர்  மானம்கெடத் தன்னிலையில் தாழ்ந்து போவார்களானால் அவர்கள், தலையினின்று வீழ்ந்த மயிரனை ஒப்பர்.
” திருமதுகை யாகத் திறனிலார் செய்யும்
பெருமிதம் கண்டக் கடைத்தும் – எரிமண்டிக்
கானம் தலைப்பட்ட தீப்போல் கனலுமே
மானம் உடையார் மனம்.” –நாலடியார்.
 செல்வச் செருக்கினால் தகுதி இல்லாதவர் செய்யும் இழிவைக் கண்டபோது, மானம் உள்ளவர்களுடைய மனம் காட்டுத் தீயைப் போலக் கொதிக்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக