புதன், 22 ஆகஸ்ட், 2018

திருக்குறள் -சிறப்புரை :972


திருக்குறள் -சிறப்புரை :972
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.---- ௯௭௨
( பிறப்பு ஒக்கும் ; சிறப்பு ஒவ்வா)
இந்நிலவுலகில் பிறக்கும் உயிர்கள் அனைத்தும் ஒரே தன்மை உடையனவே, எனினும் சிறப்பினால் அஃதாவது, பெருமை, சிறுமை இயல்புகளினால் ஒத்திருப்பதில்லை ஏனெனில், அவை செய்யும் தொழில்களால் வேறுபட்டு விளங்குவதே காரணமாம்.
“ எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தான் அமர்ந்து வரூஉம் மேவற்றாகும்.” ---தொல்காப்பியம்.
இன்ப விழைவு என்பது உலக உயிர்கள் அனைத்திற்கும் மனம் பொருந்திவரும் விருப்பமுடைமை ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக