புதன், 29 ஆகஸ்ட், 2018

திருக்குறள் -சிறப்புரை :979


திருக்குறள் -சிறப்புரை :979
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல். --- ௯௭௯
பெருமை என்னும் பெருங்குணமாவது  அக்குணத்தைக் கொண்டிருந்தாலும் வெளிப்படுத்திச் செருக்குக் கொள்ளாதிருத்தலாம். சிறுமைக் குணமாவது  பெருமைப்படத்தக்க குணம் ஒரு சிறிதும் இல்லாதிருந்தும் தன்னை முன்னிறுத்தித் தானே செருக்கித் திரிதலாம்.
“ கற்றனவும் கண் அகன்ற சாயலும் இற்பிறப்பும்
பக்கத்தார் பாராட்டப் பாடு எய்தும் தான் உரைப்பின்
மைத்துனர் பல்கி மருந்தில் தணியாத
பித்தன் என்று எள்ளப் படும்.” –நாலடியார்.
தாம் கற்ற கல்வியும் மிகுதியான மேன்மையும் நற்குடிப் பிறப்பும்  அயலார் பாராட்ட ப் பெருமை அடையும் ; அந்நற்குணங்களை உடையவன்  தன்னைத் தானே  வியந்து கூறினால், அவன்  மருந்தினாலும் தீராத பித்தன் என்று பிறரால் இகழப்படுவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக