புதன், 1 ஆகஸ்ட், 2018

திருக்குறள் -சிறப்புரை :953


திருக்குறள் -சிறப்புரை :953
நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகைஎன்ப வாய்மைக் குடிக்கு. --- ௯௫௩
நற்குடியில் பிறந்தார்க்கு இயற்கையாகவே இருக்கும் குணங்களாவன, எவரிடத்தும் மனிதநேயமிக்க முக மலர்ச்சியும் ; இல்லார்க்கும் இயலாதவர்க்கும் இல்லையெனாது வழங்கும் தன்மையும் ; கனிபோலும் இனிய சொற்களைக் கூறுதலும் ; சிறியோர் என எவரையும் இகழ்ந்து பேசாமையும் ஆகிய  நான்கும் ஆகும்.
“ தனியன் எனப்படுவான் செய்த நன்று இல்லான்
இனியன் எனப்படுவான் யார் யார்க்கே யானும்
முனியா ஒழுக்கத்தவன்.” –நான்மணிக்கடிகை.
பிறர்க்கு ஒரு நன்மையும் செய்யாதவன் மக்கட் சமுதாயத்தில் தனித்து விடப்பட்டவனாவான் ; எவராலும் வெறுக்கப்படாத ஒழுக்கம் உடையவன் யாவர்க்கும் இனியவனாவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக