திங்கள், 27 ஆகஸ்ட், 2018

திருக்குறள் -சிறப்புரை :977


திருக்குறள் -சிறப்புரை :977
இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கட் படின்.--- ௯௭
( தொழிற்று ஆம் ; சிறப்பும் தான் ; சீர் அல்லவர் கண்.)
தகுதி இல்லாதவரிடத்துச் சிறப்புகள் சேருமாயின்  அவை எல்லை கடந்த செயல்களைச் செய்யும்.
“ பொற்கலத்து ஊட்டிப் புறந் தரினும் நாய் பிறர்
 எச்சிற்கு இமையாது பார்த்திருக்கும் -  அச்சீர்
பெருமை உடைத்தாக் கொளினும் கீழ் செய்யும்
கருமங்கள் வேறு படும். ---நாலடியார்.
 நல்ல உணவுகளைக் கொடுத்து மேன்மைப் படுத்தினாலும் இழிவான எச்சில் சோற்றுக்குக் கண் இமைக்காமல் காத்திருக்கும் நாயைப் போலவே,  தகுதி இல்லாரைச் சிறப்புள்ளவர்களாக ஏற்றுக்கொண்டாலும் கீழோர்  இழிந்த செயல்களையே செய்வர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக