வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

திருக்குறள் -சிறப்புரை :974


திருக்குறள் -சிறப்புரை :974
ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.--- ௯௭௪
(கொண்டு ஒழுகின்)
கற்பு நெறி வழுவாது தன்னைக் காத்துப் பெருமை பெறும் மகளிரைப்போல, ஒருவன் தன்னுடைய தனிமனித ஒழுக்கத்தில் சிறந்து விளங்குவானாயின் அவனும் பெருமை பெறுவான்.
“ முல்லை சான்ற கற்பின்
மெல்லியல் குறுமகள் உறைவின் ஊரே.” ---அகநானூறு.
நறுமணம் மிக்க முல்லை மலரை ஒத்த, கற்பில் சிறந்த, மென்மைத் தன்மை வாய்ந்த என் தலைவி இருக்கும் இனிய ஊர் இதுவே. –தலைவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக