திருக்குறள் -சிறப்புரை
:966
புகழின்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை. ---- ௯௬௬
(புகழ் இன்றால்)
தன்மானம் இழந்து தன்னை இகழ்வார்பின் சென்று நிற்றல் ஒருவனுக்கு இம்மையில்
(வாழும் காலத்து)புகழினைக் கொடுக்காது, மறுமையில் (இறந்தபின் ) உயர்ந்தோர் உறையும்
உலகத்தும் கொண்டுசேர்க்காது, அவன் அப்படி உயிர்வாழ்தலின்
பயன்தான் யாதோ ?
“ இவண் இசை உடையோர்க்கு
அல்லது அவணது
உயர் நிலை உலகத்து உறையுள்
இன்மை.” –புறநானூறு.
இந்த அகன்ற உலகத்தில் புகழுடையார்க்கு அல்லாது பிறர்க்கு உயர் நிலை உலகை
அடைதல் இயலாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக