சனி, 4 ஆகஸ்ட், 2018

திருக்குறள் -சிறப்புரை :956


திருக்குறள் -சிறப்புரை :956
சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்துமென் பார்.—௯௫௬
( வாழ்தும் என்பார்)
பிறந்தகுடியின் பெருமை விளங்க வாழ்தல் வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள், வறுமை வந்துற்றபோதும் தம் நல்லொழுக்கத்திற்கு இழுக்கான செயல்களைச் செய்ய மாட்டார்கள்.
”செய்கை அழிந்து சிதல் மண்டிற்று ஆயினும்
பெய்யா ஒரு சிறை பேரில் உடைத்தாகும்
எவ்வம் உழந்தக் கடைத்தும் குடிப்பிறந்தார்
செய்வர் செயற் பாலவை.” –நாலடியார்.
மழையால் ஒரு பெரிய வீடு, சிதைந்து அழிந்தாலும் மழை நீருக்கு உள்ளாகாத ஒரு பக்கம் அந்த வீட்டில் இருக்கும். அதுபோல், நற்குடியிற் பிறந்தார் வறுமையால் துன்புற்றாலும் செய்யத்தக்க செயல்களைச் செய்வார்களேயன்றிச் செய்யத் தகாத செயல்களைச் செய்ய மாட்டார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக