திருக்குறள் -சிறப்புரை :975
பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல் . --- ௯௭௫
போற்றத்தக்க நற்குணங்களெல்லாம் ஒருங்கே வாய்க்கப்பெற்ற பெருமை உடையவர்,
செய்தற்கு அரிய செயலையும் எளிதாகச் செய்து முடிப்பர்.
”நிலம் நீர் வளி விசும்பு
என்ற நான்கின்
அளப்பு அரியையே..”
–பதிற்றுப்பத்து.
நிலத்தின் பரப்பு, நீரின் ஆழம், காற்றின் வேகம், வானத்தின் உயர்ச்சி ஆகியன
அளத்தற்கு இயலா. அதுபோல அப்பண்புகள் அனைத்தும் கொண்ட உன் (இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன்.)
பெருமையையும் எவராலும் அளப்பதற்கு அரிது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக