97. மானம்
திருக்குறள் -சிறப்புரை :961
இன்றி யமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல். --- ௯௬௧
தவிர்க்க இயலாத செயல்களானாலும் தன்மானம் தாழ்வுறும் நிலையாயின் எந்த ஒரு
செயலையும் செய்யாது விட்டுவிட வேண்டும்.
“ பாவமும் ஏனைப் பழியும்
படவருவ
சாயினும் சான்றவர் செய்கலார்
..” –நாலடியார்.
மானமுள்ளவர்கள் செத்துப் போவதாயிருந்தாலும் மானம்கெட வரும் பழி, பாவச்
செயல்களைச் செய்ய மாட்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக