திருக்குறள் -சிறப்புரை
:965
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்.---- ௯௬௫
மலையளவு உயர்ந்த நிலையில் உள்ளோர் தன்மானத்திற்கு இழுக்கு நேரும் வண்ணம்
ஒரு குன்றிமணி அளவே தவறு செய்தாலும் தாழ்ந்த நிலையினை அடைவர்.
“இசையும் எனினும் இசையாது
எனினும்
வசைதீர எண்ணுவர் சான்றோர்…”
–நாலடியார்.
சான்றோர் தம்மால் முடியும் என்றாலும் முடியாது என்றாலும் எப்பொழுதும்
குற்றமற்ற செயல்களையே செய்ய எண்ணுவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக