வியாழன், 30 ஆகஸ்ட், 2018

திருக்குறள் -சிறப்புரை :980


திருக்குறள் -சிறப்புரை :980
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும். ---  ௯௮0
பெருமை என்னும் பெருந்தன்மை உடையோர் பிறருடைய குற்றைத்தை மறைத்துக் குணத்தை மட்டுமே கூறுவர் ; சிறுமைக் குணம் உடையோர் பிறருடைய குணத்தை மறைத்துக் குற்றத்தையே கூறுவர்..
“ செய்த நன்று உள்ளுவர் சான்றோர் கயம் தன்னை
வைததை உள்ளி விடும். “ ---நாலடியார்.
 சான்றோர்கள் பிறர் செய்த நன்மையை மட்டுமே நினைத்துக் கொண்டிருப்பார்கள் ; கயவர்கள் பிறர் தம்மை வைததை மட்டுமே நினைத்துக் கொண்டிருப்பார்கள்.


1 கருத்து: