திருக்குறள் -சிறப்புரை
:970
இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு.---- ௯௭0
தன்மானத்திற்கு ஒருசிறிது இழுக்கு நேரினும் உயிரை நீத்துவிடும் இயல்புடையாரின்
பெருமையைப் போற்றிப் புகழ்வர் இவ்வுலகோர்.
” கோடு உயர்ந்தன்ன தம் இசை
நட்டுத்
தீது இல் யாக்கையொடு மாய்தல்
தவத் தலையே.” –புறநானூறு.
நல்வினை ஆற்றி, இமயமலையின் ஓங்கிய சிகரம் போன்று தம் புகழை நிலைநிறுத்திப்
பழியற்ற உடலோடு சாதல் நன்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக