மெய்ப்பொருள் காண்பது அறிவு -67
சோதிடம்
உண்மையா..?
இன்ப விழைவு உயிர்களின் இயல்பாகும் எனினும்
துன்பம் தொடர்கதையாகின்றது. ஆசையே துன்பங்களுக்குக் காரணம் என்றாலும் சூழலும் துன்பச்
சுழலாக மாறுகின்றது. நிகழ்காலம் கொடியதென்றாலும் எதிர்காலம் இனிமையாக இருக்கும் என்ற
எண்ணம் எழுந்துகொண்டே இருக்கின்றது. அந்த அடிப்படையில்தான் வாழ்க்கை வண்டியும் உருண்டோடிக்
கொண்டிருக்கிறது.
ஒளிமயமான எதிர்காலத்தை அறிந்துகொள்ள மனிதனுக்குத்தான்
எத்தனை ஆவல்? கடவுள் வழிபாடும் காணிக்கையும்
சமயத்தத்துவமும் சந்நியாசிகளின் அருள்வாக்கும் சோதிடமும் ஆருடமும் எதிர்காலத்தில் நிகழக்கூடியவற்றைச்
சொல்கின்றனவோ இல்லையோ நிகழ்காலத்திற்கு ஆறுதல் அளிக்கின்றன என்பது உண்மையே! இந்த அற்பச்
சுகத்திற்கு அறிவு அடிமையாகின்றது… விலை போகின்றது. கிரகங்கள் மனிதர்கள்மீது ஆட்சி
செய்கின்றன என்று கூறி, சோதிடர்கள் மனிதர்களை ஆட்டிப்படைக்கின்றனர்.—இரெ. குமரன்.
நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை. சோதிடர்களிடம் தாமாகவே முன்சென்று பலியாடாக ஆவதை நினைக்கும்போது வேதனையாக உள்ளது.
பதிலளிநீக்கு