மெய்ப்பொருள் காண்பது அறிவு -66
பாலியல்
கல்வி
சங்க இலக்கிய அகப்பாடல்கள் பாலியல் பற்றிய
செய்திகளை அறிவியல் முறையில் விளக்குகின்றன. காதல் ஒழுக்கங்கள் நெறிகளுக்கு உட்பட்டவை.
மனம் போன போக்கில் இவ்வொழுக்கங்கள் நிகழுமாயின் அவை மனித சமுதாயத்திற்குப் பெருங்கேடாய்
முடியும். பாலியல் முறையாக அறிந்து ஒழுகவேண்டிய ஓர் அறிவியல் பாடமாகும் என்பதை அகப்பாடல்கள்
உணர்த்துகின்றன.
“ அகத்திணை ஓர் பாலிலக்கியம் பெயரில்லாதார் வாழ்க்கையிலிருந்து
காம நுணுக்கங்களைக் கற்றுக் கொள்கிறோம். காமம் பற்றிய ஆணுடல் பெண்ணுடலின் கூறுகளையும்
இயற்கை, செயற்கை, திரிபு ஆகிய மனக் கூறுகளையும் கரவின்றிப் பட்டாங்குச் சொல்வது பாலிலக்கண
நூல்.”
–அறிஞர் வ.சுப. மாணிக்கம்.
“சங்க
இலக்கியத்திற்குப் பிறிதொரு பெயர் சூட்டுக என்று கேட்டால் தயங்காமல் உளவியல் இலக்கியம்
எனக் குறிப்பிடலாம். அகத்திணைப்பாடல்கள் நூற்றுக்கு நூறும் புறத்திணைப்பாடல்கள் நூற்றுக்கு
எழுபத்தைந்தும் ‘உளவியல்’ பற்றியனவே ஆகும்.” –------------அறிஞர் தமிழண்ணல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக