திங்கள், 27 ஆகஸ்ட், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -64

மெய்ப்பொருள் காண்பது அறிவு -64
திருக்குறள் – வாழும் வள்ளுவம்.
கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை. –570.
கடுங்கோல் அரசன் நல்லவர்களை நீக்கிவிட்டுக் கல்லாத  அறிவிலிகளைத் தனக்குத் துணையாகக் கூட்டிக்கொள்வான்; அந்தக் கூட்டத்தைத் தவிர நிலத்திற்குச் சுமையாக இருப்பது வேறு ஒன்றும் இல்லை.
 –பேரா. ப.முருகன்.

இந்தோனேசியாவில்…….
ஒரு பல்கலைக்கழக விவுரையாளர் சால்டி  என்பார் 11/2 இலட்சம் ரூபாய் ( 
இந்திய ரூபாய் கணக்கில்) மாத ஊதியம் பெறுகிறார். மேற்கு சுமத்ரா எனும் 
அந்த மாநிலத்தில் ஒரு சட்டசபை உறுப்பினர் அம்மாநிலச் சட்டசபை முடிவு 

செய்தபடி 31/2 இலட்சம் ரூபாய் சிறப்பு ஊதியம் பெறுகிறார். இது அவரது 
வழக்கமான ஊதியம் மற்றும் இதர படிகளை விட அதிகப்படியாகக் கொடுக்கப்பட்டது. மக்களின் வரிப்பணத்தை அம்மாநிலத்தின் 55 உறுப்பினர்கள் இப்படிச் சொந்தமாக்கிக் கொண்டு செலவு செய்யப்படுவதை எதிர்த்து விரிவுரையாளர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறார், எதிர்பார்த்த பலன் ஒன்றும் கிட்டவில்லை. அங்கு சட்டசபையின் அதிகாரம் வானளாவியது. பேராசிரியர் சால்டியும் விடவில்லை. ஒரு பெரிய ஊர்வலத்தைக்கூட்டிச் சட்டசபைக் கட்டிடத்துக்கே சென்று கட்டிடத்தின் உச்சியில் “ இது திருடர்களின் குகை” என்று பெரிய எழுத்தில் அறிவிப்புப் பலகை ஒன்றைக்கட்டிவிட்டு வந்தனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக