மெய்ப்பொருள் காண்பது அறிவு -56
மெய்யறிவு
(தத்துவ ஞானம்)
”உன்னை
அறிந்துகொள்” – என்பது சாக்ரடீசு தத்துவ ஞானத்தின் முதற் கோட்பாடாகும்.
“
தத்துவ ஞான ஆராய்ச்சிக்கு முதலில் அவசியமாக இருப்பது துணிவான, சுதந்திரமான அறிவே.”-
மார்க்சு
எவற்றையெல்லாம் நடைமுறையில் மெய்ப்பித்துச் சாதிக்க
விரும்புகிறமோ அவற்றைப்பற்றி நாம் பெற்றிருக்கும்
ஞானம்தான் தத்துவம் எனப்படுவது.
” தத்துவ ஞானம் இல்லாமல் முன்னேற்றம்
ஏற்பட முடியாது.
தத்துவ ஞான ஆராய்ச்சிக்கு முதலில் அவசியமாக இருப்பது
துணிவான, சுதந்திரமான அறிவே.” – மார்க்ஸ்.
ஜோஃபிஃச்தே : ( Fichte, 1762-1814) செர்மன் தத்துவ ஞானி.
“தத்துவ ஞானம், “ மனித அறிவின் எல்லா
அடிப்படை அம்சங்களையும் முடிவாகத் தருகிறது….. ஒரு பிரச்சனையைப் பற்றிச் செய்யப்படுகிற
ஒவ்வொரு ஆராய்ச்சியும் அப்பிரச்சனைக்கு இறுதியான தீர்வு கண்டுவிடுகிறது.”
“ இயற்கை, சமுதாயம், சிந்தனை ஆகியவற்றின்
வளர்ச்சியின் மீது ஆட்சி செய்யும் மிகப்பொதுவான விதிகளைக் குறித்த விஞ்ஞானமே தத்துவ
ஞானம். இந்த விஞ்ஞானம் மனித இனம் சேமித்து வைத்துள்ள அறிவு அனைத்திலிருந்தும் பெறப்பட்ட
முடிவு ஆகும்.” –மார்க்ஸ்.
ஜே.பி.எஸ். ஹால்டேன் ( Haldane ) ஆங்கில உடலியல்
விஞ்ஞானி.
“இயக்கவியல் பொருள்முதல் வாதத்தில் படிப்படியாக அதிகரித்துவந்த எனது அறிவு, நான் அண்மையில் பிரசுரித்துள்ள விஞ்ஞான ஆய்வுகளில் பெரும்பகுதியை நிறைவு செய்வதற்கு ஊக்கம் அளித்தது. விஞ்ஞான ஆராய்ச்சிப் பணிபுரிவதற்கு இயக்கவியல் பொருள்முதல் வாதம் ஒரு பயனுள்ள சாதனம் என்பதை நான் காண்கிறேன்.”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக