திருக்குறள் -சிறப்புரை
:962
சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.---- ௯௬௨
சீரும்சிறப்புமாகப் பெருமையோடு வாழ விரும்புகிறவர்கள் பெரும் பொருள் தேடிவரினும்
தன்மானத்திற்கு இழுக்கான செயல்களைச் செய்யமாட்டார்கள்.
” புகழ் எனின் உயிரும் கொடுக்குவர்
பழி எனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்…”
---- புறநானூறு.
புகழ் என்றால் தம் உயிரையும் கொடுப்பர் ; பழி வந்து சேரும் என்றால் உலகம்
முழுவதும் ஒருங்கே கிடைப்பினும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக