மெய்ப்பொருள் காண்பது அறிவு -49
1. தொன்மையான இந்திய
உலகாயதர்கள், உலகம்
உண்மையானதென்று நம்பினர்.( அதாவது உலகம் மாயைத் தோற்றமல்ல,
உண்மையானது.
2. பொருள்களின் இயற்கை, செயல்கள் இவற்றின்
அடிப்படையிலேயே வாழ்க்கை எழுகிறது.
3. உலக வாழ்க்கையின் பொருளாயாத அடிப்படையில்
ஐம்பூதங்கள் ( நான்கு என்று கருதுவோரும் இருந்தனர்.)
4. ஐம்பூதங்களின் பல்வேறு வகையான சேர்க்கையால்
பிரபஞ்சத்தின் பல்வேறு பொருள்களும் உயிரினங்களும் உண்டாகின்றன.
5. உணர்வும் உயிரும் ஒன்றே. அது ஐம்பூதச்
சேர்க்கையால் உண்டாவதே, ஐம்பூதங்களின் ஒரு குறிப்பிட்ட விதமான சேர்க்கையால் உணர்வு
என்ற குணம் பொருளில் தோன்றுகிறது.
6. உண்மையைக் காட்சிப் பிரமாணத்தால்
அறியலாம்..
( காட்சி – Direct Perception)
7. காட்சியும், காட்சியை அடிப்படையாகக் கொண்ட அனுமானமும் அறிவைப் பெறும் வாயில்கள் அல்லது இவையே அறிவின் ஊற்றுக்கண்கள், காட்சியின்றி அனுமானமில்லை ; அனுமானமின்றி அறிவு தோன்றுவதில்லை..
( மேலும் விளக்கம் பெற, -- நா. வானமாமலை . தமிழர் பண்பாடும் தத்துவமும் – நூலினைக் காண்க.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக