திங்கள், 6 ஆகஸ்ட், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -44

மெய்ப்பொருள் காண்பது அறிவு -44
முருகன்

“முருகனைக் களத்திலும் ஊர் மன்றிலிலும் வெறியாடி வழிபடுவது பெருவழக்கமாயிருப்பினும், அபூர்வமாகச் சிலவிடங்களில் முருகனுக்குக் கோயிலகள் இருந்தனவென்பதை புறநானூற்றில்(299) வரும் ‘முருகன் கோட்டம்’ என்ற சொற்றொடர் காட்டும்.

அக்காலத்திலேயே அவனுக்கு ஒரு மனைவி இருந்தாள். சங்க இலக்கியப் பரப்பில் ( பரிபாடல், திருமுருகாற்றுப்படை தவிர, இவை பிற்காலத்தவை முருகன் கருத்து, வடநூல் சான்றுகள், கருத்துகளோடு இணைந்து வளர்ச்சிபெற்ற நிலையில் சித்திரிப்பதால்), மிக எளிமையானதும் பிற பண்பாட்டுக் கருத்துகள் இல்லாததுமான கருத்துக்களைக் கூறும் நூல்கள் முந்தியவை.

 இக்காலத்திலேயே முருகனுக்கு ஒரு மனைவியையும் கற்பனை செய்திருந்தார்கள். பிற்கால வழக்குப்போல இரு மனைவியர்கள், தேவயானை, வள்ளி என்ற இருவரைப்பற்றிய குறிப்புகள் முற்கால சங்க இலக்கியத்தில் கிடைக்கவில்லை. பரிபாடல் காலத்திற்குப் பின்னரே முருகன் இரு மனைவியரின் கணவனாகச் சித்திரிக்கப்படுகிறான். தமிழ் நாட்டில் அவனது முதல் மனைவியான வள்ளியின் பெயரை நற்றிணை அடியொன்றினால் அறிகிறோம்.

“முருகு புணர்ந்தியன்ற வள்ளி போல….” (82).
பழங்காலக் குறவர், எயினர், கானவர் போன்ற குறிஞ்சி நில மக்கள் (Food gatherers) புஞ்செய் அல்லது நஞ்செய் பயிர்த் தொழிலை மேற்கொண்ட ஆரம்பகாலத்தில் தோன்றிய கடவுட் கருத்து முருகன் ஆகும்.” – நா. வானமாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக