98.
பெருமை
திருக்குறள் -சிறப்புரை
:971
ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல். --- ௯௭௧
(அஃது இறந்து)
ஒருவனுக்குப் புகழாவது செயற்கரிய செயல்களைச் செய்து முடிக்கும் ஆற்றலே
ஆகும் . ஒருவனுக்கு இழிவாவது செயலாற்றல் இன்றி வாழலாம் என்று எண்ணும் எண்ணமாகும்.
“ கற்றனவும் கண் அகன்ற சாயலும்
இற்பிறப்பும்
பக்கத்தார் பாராட்டப்பாடு
எய்தும்….” ---நாலடியார்.
“ கற்ற கல்விபற்றியும் சிறந்த ஒழுக்கம்பற்றியும் குடிப்பிறப்பின் பெருமைபற்றியும்
மற்றவர்கள் பாராட்டிப் பேசுவதே பெருமை உடையதாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக