திருக்குறள் -சிறப்புரை
:981
99.சான்றாண்மை
கடனென்ப நல்லவை எல்லாம் கடனறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு. ---
௯௮௧
சான்றாண்மை என்னும் நல்லொழுக்கம் நிறைந்தார், தாம் ஆற்ற வேண்டிய கடமைகள் இவை என அறிந்து மன்னுயிர்க்கு
நன்மை தருவனவற்றைச் செய்வதைத் தம் கடமையாகவே மேற்கொள்வர்.
” பிறர் நோயும் தம்நோய்
போல் போற்றி அறன் அறிதல்
சான்றவர்க்கு எல்லாம் கடன்….”
–கலித்தொகை.
பிறருடைய துன்பத்தையும் தம் துன்பம் போல் போற்றி ஒழுகுதல் சான்றோர்க்கெல்லாம்
கடமை ஆகும்.
சான்றோருக்கான பொருள் கூறிய விதம் அருமை ஐயா.
பதிலளிநீக்கு