திருக்குறள் -சிறப்புரை
:960
நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
வேண்டுக யார்மாட்டும் பணிவு.--- ௯௬0
நல்வாழ்வு வாழ வேண்டுமெனில்பழிக்கு அஞ்சும்
பண்பாகிய நாணுடைமை வேண்டும் ; பிறந்தகுடியின் பெருமையைக் காக்க வேண்டுமெனில் யாவரிடத்தும்
பணிவன்பு உடையவனாக நடந்துகொள்ள வேண்டும்.
“ பிறர் தம்மை பேணுங்கால் நாணலும் பேணார்
திறன் வேறு கூறின் பொறையும் –
அற வினையைக்
காராண்மை போல ஒழுகுதலும் இம்மூன்றும்
ஊராண்மை என்னும் செருக்கு.” –திரிகடுகம்.
பிறர் புகழ்ந்து பேசும்பொழுது தனக்கு இது தகாது
என்று நாணுதலும் ; பிறர் தன்னை இகழும்பொழுது பொறுத்தலும் ; மேகத்தைப் போல் கைம்மாறு
கருதாமல் பிறர்க்கு உதவி செய்தலும் ஆண்மைக்குரிய செல்வங்களாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக