புதன், 8 ஆகஸ்ட், 2018

அண்ணாவின் நிழலில்...!

அண்ணாவின் நிழலில்...!
உழைப்பின் பெருமை உரியவனுக்கு மட்டுமே வந்துசேரும்; எவராலும் தட்டிப் பறிக்க முடியாது.
வீர நடை போட்டுக் களம்பல கண்ட வெற்றி வீரன்
விடை பெறுகிறேன் அன்பு உடன் பிறப்புகளே..!
கல்மனம் கொண்டோரும் கலங்கினர்…கண்ணீர் வழிய
இமயம் சரிய இதயம் இடங்கொடுக்குமோ..? அவரோ..!
அண்ணனின் நிழலில் இளைப்பாற ஆசை ; இறுதி விருப்பமும் அதுவே என்று எழுதி வைத்தார்..சொல்லியும் வைத்தார்..
பிள்ளைகளிடம்
நண்பர்களிடம்
உடன்பிறப்புகளிடம்
விரும்பும் மக்களிடமும்
அண்ணனின் நிழல் தேடி அலைந்தார் அருமை மகன் ; அப்பாவின் இறுதி விருப்பத்தை நிறைவேற்ற..!
நிழல் தர மறுத்தன ….பட்ட மரங்கள்
 அந்த ஒரு நொடியில் ……
கலைஞரின் குடும்பம் இடிந்து நொறுங்கியது.
புலிக்குப் பிறந்தது பூனையாகுமா..?
நிழல் தேடி நீதிமன்றம் சென்றார் அன்பு மகன்
வென்றார் முதன்முதலாக ‘அப்பா’
மகிழ்ச்சியில் கண்ணீர் வழிய
உன் ஆசையை நிறைவேற்றுவேன் –நீ
துயில் கொள்வாய் .. !
இந்தியாவே எழுந்து நின்று
சீரும் சிறப்புமாய் இறுதி ஊர்வலம்
பெறற்கரிய பெருமையெல்லாம் பெற்றதே நீதிமன்றம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக