செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

திருக்குறள் -சிறப்புரை :978


திருக்குறள் -சிறப்புரை :978
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.--- ௯௭
பெருமை மிக்க குணங்களைக் கொண்டோர் என்றும் மாற்றாரை மதித்துப் பணிவுடன் நடந்து கொள்வர் ; சிறுமைக் குணம் கொண்டோர் வெட்கமின்றித் தன்னைதானே   வியந்து  புகழ்ந்துரைப்பர்.
” தம் புகழ் கேட்டார் போல் தலை சாய்த்து மரம் துஞ்ச.” –கலித்தொகை.
தம்மைப்பற்றிப் புகழ்ந்து பேசும் புகழுரைகளைக்கேட்டு நாணிய சான்றோர் போல, மரங்கள் தலை சாய்த்து உறங்கின.


1 கருத்து: