திங்கள், 13 ஆகஸ்ட், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -50


மெய்ப்பொருள் காண்பது அறிவு -50
இலிங்க வழிபாடு
”இருக்கு வேத காலத்தில் ஆரியர்களிடையே சிவ வழிபாடு இருந்ததென்று இன்றுவரையும் எந்த ஆராய்ச்சியாளராலும் காட்ட முடியவில்லை. சிவன், ஒரு சிறு தெய்வமாகவும் இருக்கு வேதத்தில் கூறப்படவில்லை. சிவா என்னும் சொல் உருத்திரனுக்கு அடையாக ஓரிடத்தில் மாத்திரம் வந்துள்ளது. இது உருத்திரனும் சிவனும் ஒன்று எனபதற்குச் சான்றாகாது. உருத்திரன் மங்கலத்தினாலும் அருளினாலும் சிவன் என்றே பொருள்படுகின்றது. இருக்கு வேதத்தின் பத்தாம் மண்டலத்தில் திராவிடரின் ஆண் எனப்பட்ட சிவனே குறிக்கப்பட்டுள்ளது. பிற்காலத்தில் சிவன் மூர்க்க குணமுடையவராகவும் சில வேளைகளில் சாந்த முடையவராகவும் கூறப்பட்டுள்ளார். சிவனுக்கு உரிய முத்தொழிலும் மகேசுர மூர்த்திக்குரியதாகச் சொல்லப்பட்டுள்ளது. இருக்கு வேதத்தில் இதற்கு இணை காண முடியவில்லை. மொகஞ்சதரோவிற் காணப்பட்ட சின்னங்கள் பிராமண காலத்தனவென்று தோன்றவில்லை. பிராமண காலத்தில் ஆரியச் சார்பான சிவமதம் வளர்ச்சி அடைந்திருந்தாலும் அங்கு காணப்பட்டவை ஆரியருக்கு முன்  அங்கு வாழ்ந்தவர்கள் ஆரியரல்லர் என்பதைக் காட்டுவன. அங்குக் காணப்பட்ட எவையேனும் ஆரியருக்கு உரியனவல்ல. அவைகளுட் சில பிராமண காலத்தனாயின், அங்குக் காணப்படாத விட்டுணுவின் சங்கு சக்கரம் இந்திரன் என்பவைகளுக்கு விளக்கம் கூறுவதெப்படி.?   --சிந்துவெளித் தமிழர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக