வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -47

மெய்ப்பொருள் காண்பது அறிவு -47
உலகாயதம்
வாழ்க்கையின் அடிப்படைக் கேள்விகள் சில உள்ளன.
அவற்றிற்கு எந்தத் தத்துவம் விடை அளிக்க வேண்டும்?
உயிர் என்றால் என்ன?
உயிருக்கும் உடலுக்கும் என்ன தொடர்பு ?
இப்பிரபஞ்சத்தை மனிதன் எவ்வாறு அறிகிறான் ?
பிரக்ஞை என்றால் என்ன ?
இவ்வுலகில் புனர்ஜன்மம் உண்டா ?
வேறோர் உலகில் வாழ்க்கை உண்டா ?
இக் கேள்விகளுக்கு ஐம்பூதக் கொள்கை அடிப்படையில் உலகாயதர்கள் விடையளித்தனரா ?

அவர்களே எழுதிய நூள்கள் எதுவும் பண்டைக் காலத்திலிருந்து  நமக்குக் கிடைக்காததால், இக்கேள்விகளுக்கு அவர்கள் என்ன விடையளித்தனர் என்பதை நம்மால் அறிய முடியவில்லை.
உலகாயதரின் பகைவர்களே அவர்களது கருத்துகள் இவையென்று  பண்டைக் காலம்முதல் சொல்லி வந்திருக்கிறார்கள். அதுவே பூர்வபட்ச வாதம். உலகாயதர்களுடைய கருத்துகளைப் பகைவர்கள் திரிபின்றிக் கூறுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. பகைவர்கள், உலகாயதரின் கருத்தை மறுக்க எளிதாயிருக்கும்படி அவர்களது கருத்தைத் திரித்துக்கூறுவது எளிது. பகைவர்களின் பூர்வபட்சக் கருத்துக்களிலிருந்து உலகாயதத்தின் உருவத்தை முழுமையாக அறிவது கடினம் என்ற கருத்தை , தேவி பிரசாத் பின்வருமாறு கூறுகிறார். – நா. வானமாமலை.--- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக