வியாழன், 9 ஆகஸ்ட், 2018

திருக்குறள் -சிறப்புரை :959


திருக்குறள் -சிறப்புரை :959

 நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல். ------ ௯௫௯
நிலத்தின் இயல்பினை அந்நிலத்தில் தோன்றிய வித்தின் முளையே காட்டிவிடும் அதைப்போல ஒருவனுடைய குடிப்பிறப்பை அவன் வாயிலிருந்துவரும் சொற்களே காட்டிவிடும்.
” நில நலத்தால் நந்திய நெல்லே போல் தம்தம்
குல நலத்தால் ஆகுவர் சான்றோர்…” –நாலடியார்.
நிலத்தின் வளத்தினால் பெருகிய நெல்லைப் போல் தம்முடைய குடிப்பிறப்பின் சிறப்பினால் ஒழுக்கமும் உயர்வும் பெற்றுச் சான்றோராகத் திகழ்வர்.

1 கருத்து: