மெய்ப்பொருள் காண்பது அறிவு -55
கடவுள்
”ஹெகலைப் பொறுத்தமட்டில் ‘கடவுள் இருப்பதைப்பற்றிய
நிரூபணங்கள்’ தொடர்பாக மார்க்ஸ் அவரையும் விமர்சனம் செய்கிறார். இந்த ‘நிரூபணங்களை’
காண்ட் ஏற்கெனவே மறுத்துவிட்டார். ஆனால் ஹெகல் அவற்றைத் தலைகீழாக நிறுத்திவிட்டார்.
‘ அதாவது அவற்றை நியாயப்படுத்துவதற்காக நிராகரித்துவிட்டார.’ ‘ ஆதரித்து வாதாடுகின்ற
வழக்குரைஞர் தம்முடைய கட்சிக்காரர்களைத் தாமே
கொலை செய்வதன் மூலமாகவே அவர்களைத் தண்டனையிலிருந்து காப்பாற்ற முடியுமென்றால் அந்த
நபர்கள் எந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள்…?’ என்று மார்க்ஸ் கிண்டலாகக் கேட்கிறார்.
‘கடவுள் இருப்பதைப்பற்றிய நிரூபணங்கள்’,
உண்மையில் தலைமையான மனித உணர்வு இருப்பதைப்பற்றிய நிரூபணங்களே என்று எடுத்துக்காட்டுகிறார்.
இயற்கை நன்கு அமைக்கப்பட்டிருப்பதால் கடவுள் என்று ‘நிரூபணங்களில்’ ஒன்று கூறுகிறது.
ஆனால் இயற்கை அமைப்பின் ‘பகுத்தறிவுத் தன்மை’
கடவுள் மிகையானவர், கடவுள் தேவையில்லை என்பதை நிரூபிக்கிறது.
‘கடவுள் இருக்கிறார்’ என்பதற்கு மெய்யான
நிரூபணங்கள் பின்வருமாறு கூறவேண்டும்., ‘ இயற்கை மோசமாக அமைக்கப்பட்டிருப்பதால் கடவுள்
இருக்கிறார்’, ’உலகத்தில் பகுத்தறிவு இல்லாதபடியால் கடவுள் இருக்கிறார்.’ ‘சிந்தனை
இல்லாதபடியால் கடவுள் இருக்கிறார்..’
“உலகம் பகுத்தறிவுடன் தோன்றவில்லை என்பவருக்கு….
அவருக்குக் கடவுள் இருக்கிறார். அல்லது பகுத்தறிவு இல்லாததனால் கடவுள் இருக்கிறார்.’”
இந்த முடிவு அக்காலத்துக்கு முற்றிலும்
துணிவானதாகும்.
மனித சுய உணர்வே ‘ உயர்ந்த கடவுள்’ ‘ அதைத்தவிர வேறு எதுவும் கிடையாது.” என்று மார்க்ஸ்
உறுதியாகப் பிரகடனம் செய்தார். ‘ உன்மையைச் சொல்வதென்றால் நான் கடவுள் கூட்டத்தை வெறுக்கிறேன்,’ என்று புரோமித்தியஸ்
துணிச்சலாகக் கூறுயதை. ‘ வானத்திலும் பூமியிலும் உள்ள அனைத்துக் கடவுள்களுக்கும் எதிரானதாக’
அவர் திரும்பினார். இந்தத் துணிவான கருத்து மத எதிர்ப்பு மட்டுமல்லாமல் அரசியல் தன்மையும்
கொண்டிருந்தது.’” ---நூல் : மார்க்ஸ் பிறந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக