வியாழன், 16 ஆகஸ்ட், 2018

மெய்ப்பொருள் காண்பதுஅறிவு -53

 மெய்ப்பொருள் காண்பதுஅறிவு -53
மதம்
” மதம் என்பது தன்னைத்தானே அறிந்துகொள்ளாத அன்றேல் தன்னை மீண்டும் இழந்துவிட்ட மனிதன் சுயபிரக்ஞையும் சுய உணர்வுமாகும். ஆனால் மனிதன் என்போன் இந்த உலகத்துக்கு அப்பாலே குந்தியிருக்கும் ஒரு கருத்துப் பொருளன்று. மனிதன் என்பது மனிதனின் உலகமே அரசு; சமுகம்தான் மனிதன். இந்த அரசு, இந்தச் சமுகம் மதத்தை உண்டாக்குகிறது. மதம் என்பது மறுதலையான (தலைகீழான) உலகப் பிரக்ஞையாகும். ஏனெனில் மதத்தில் தலைகீழான ஒரு உலகமே காணப்படுகிறது. மதம் என்பது அந்த உலகில் பொதுக்கொள்கையாகும், மதம் மக்களின் அபின்.

      மத அவலம் (அதாவது மதத்தில் இடம்பெறும் ஆத்ம அவலம்) என்பது ஒரு வேளையில் உண்மையான அவலத்தின் வெளிப்படையாகவும் அந்த உண்மையான அவலத்திற்கு எதிரான எதிர்ப்பாகவும் அமைகின்றது. மதம் என்பது ஆத்ம உயிர்ப்பற்ற ஒரு நிலைமையின் உயிர்ப்பாக இருப்பதுபோல் ஒடுக்கப்பட்ட ஜீவனின் பெருமூச்சாக இதயமற்ற உலகில் இதயமாக உள்ளது.

  தத்துவஞானிகள் உலகத்தைப் பல்வேறு வழிகளில் வியாக்கியானம் செய்து வந்திருக்கிறார்கள். ஆனால் விஷயம் என்னவோ அந்த உலகத்தை மாற்ற வேண்டும் என்பதுதான்.”  – காரல் மார்க்ஸ். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக